இடுகைகள்

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

படம்
மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு மூன்று நாள் பயணமாக புறப்பட்டார். ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் மூலம் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு மற்றும் மூலோபாய நட்பை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் மாஸ்கோவில் நடைபெறும் 75 வது வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் தங்கியிருக்கும் சமயத்தில் ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் மற்றும் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுகு ஆகியோரை சந்திக்க உள்ளார், மேலும் ரஷ்ய தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை விரைவாக வழங்குவது தொடர்பாக அவர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . 2021 டிசம்பருக்குள் இந்தியா எஸ் -400 ஏவுகணை பாதுகாப்பு முறையைப் பெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதன் விநியோகம் தாமதமாகிறது. இந்த விஜயத்தின் போது, ​​ரஷ்ய போர் விமானங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்களை அவசரமாக வழங்குவது குறித்து ...

2024’ல் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் : மோடி அரசுடன் மோதுகிறாரா பிரணாப் முகர்ஜி?

படம்
  முன்பொரு காலத்தில் காங்கிரஸ் இந்தியாவில் கோலோச்சிய போது, பல்வேறு கால கட்டங்களில் நிதி அமைச்சகத்திலும், பின்பு இந்திய ஜனாதிபதியாகவும் பணியாற்றிய திரு பிரணாப் முகர்ஜி முன்பு மோடி அரசை புகழ்ந்து வந்த நிலையில் தற்போது விமர்சனத்தை வைத்திருப்பது டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரம் கூடிய விரைவில் 5 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று கூறியிருந்தது. இதையடுத்து தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ‘இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியனாக டாலர் அளவிற்கு உயர தற்போதைய அரசு மட்டம் காரணமல்ல. முன்னதாக இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை ஆண்ட காங்கிரசும் அதன் ஆட்சியாளர்களும் போட்ட வலுவான அடித்தளமும் முக்கிய காரணம். இதை மறுத்து 55 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி செய்ததை விமர்சிப்பவர்கள் சுதந்திரத்தின் போது நாடு இருந்த நிலையையும் தற்போது நாடு இருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாட்டிற்காக தொண்டாற்றிய பலர் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தனர். ஆனால...

பயிற்று மொழியாக தாய்மொழியைத் திணிக்கும் மத்திய அரசு? : புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன

படம்
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களிலும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட நபர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தயாரிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையானது கடந்த மே 31'ம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவே இந்த புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் வேலையில் ஈடுபட்டது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மக்களின் கருத்தறிய வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்  இதை இந்தித் திணிப்பு என்று சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர். திராவிட அரசியல்வாதிகள் இதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் மக்களிடையே இந்தித் திணிப்பு என திரும்பத் திரும்ப பேசி உணர்ச்சியை தூண்டிக் கொண்டே இருந்ததால், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மத்திய அரசிற்கு எந்த ஒரு மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை. அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அரசு செயல்படுகிறது" என அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து மும்மொழிக் கொள்கையை இந்தித் திணிப்பு என தவற...

63 வயதில் பதவி விலகிய காமராசர் எங்கே? 69 வயசுல கட்சி ஆரம்பிக்கப் போறேனு சொல்ற ரஜினி எங்கே? : நாம் தமிழர் கலகலப்பு

படம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை என்றுமே கடுமையாக எதிர்ப்பவர் தான் நம்ம சிவகங்கை அண்ணாச்சியும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் பல வருடங்களாக அரசியலுக்கு இதோ வருவார், அதோ வருவார் என எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு வழியாக, "கிளம்பிட்டேன், இதோ வந்துக்கிட்டே இருக்கேன். அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் வந்து விடுவேன்" எனக் கூறி இருக்கிறார். ஆக அவர் அரசியலுக்கு வருவது உறுதியாயிற்று. இதையடுத்து அவரை வந்தேறி என்றும் பாஜக சதியென்றும் முகநூலில் கலகலப்பூட்டிக் கொண்டிருந்த நம் தம்பிமார்கள் தற்போது புதியதாக ரஜினியைப் பற்றிய மீம் ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர். அந்த மீம் இது தான். இந்த மீம்'ல் "63 வயதில் பதவி விலகிய காமராசர் எங்கே? 69 வயதில் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற ரஜினி எங்கே?" எனக் கேட்டு கலாய்த்துள்ளனர். கட்சி ஆரம்பிக்க வயசு முக்கியமா? அவர் கட்சி ஆரம்பித்து அவருடைய கொள்கைகளை பேசுவார். மக்கள் அவருக்கு ஆதரவளித்தால் அவர் ஆட்சியில் க...

நாங்களாத் தொட மாட்டோம், ஆனா அவுங்களே கலைச்சிடுவாங்க : கர்நாடக அரசைப் பற்றி எடியூரப்பா அதிரடிப் பேச்சு

படம்
கடந்த 2018'ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பி.எஸ்.எடியரப்பா தலைமையில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் மொத்தம் 224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 104 இடங்கள் மட்டுமே பெற்றதாலும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைப் பெற முடியாமல் போனதாலும் ஆட்சியமைக்க இயலவில்லை. இந்நிலையில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியமைப்பதை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வெறும் 37 தொகுதிகளில் வென்றிருந்த மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக'வின் எடியரப்பா குதிரை பேரங்களில் ஈடுபட்டு ஆட்சியைக் கலைக்க முயல்வாத பலமுறை ஆளும் கூட்டணி தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் பதவியேற்கும் நிகழ்விற்காக டெல்லி சென்ற எடியரப்பா கர்நாடகா திரும்பிய போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் நான். கட்சியின் மத்திய...

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் ஆயத்தப் பணிகள் : எங்கே செல்கிறது தமிழகம்? பரபரப்புத் தகவல்கள்

படம்
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணமாக பல விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாம் அந்த காரணங்களை பிறகு அலசலாம். தற்போது முகநூலில் குறிப்பாக சீமானுடைய நாம் தமிழர் கட்சி தம்பிகள் "திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். இனியாவது விழிக்கத் துவங்குமா?" என தொடர்ந்து நேற்று முதல் பல்வேறு விதமாக இரண்டு புகைப்படங்களை காட்டி பகிர்ந்து வருகின்றனர். படம் 1 : படம் 2 : மேலே காட்டப்பட்டுள்ள இந்த இரு புகைப்படங்கள் தான் அனைத்து பதிவுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு ஆயத்தப் பணிகள் இனிதே தொடங்கியது என பல்வேறு நபர்களால் பதியப்பட்டுள்ளது. நீங்களும் முகநூலில் சென்று, "திருவாரூர் புலிவலம்" என தேடுபொறியில் தேடிப் பாருங்கள். பல்வேறு பதிவுகள் நேற்று முதல் பதிவிடப்பட்டிருப்பதும் அதில் பெரும்பாலானவை நாம் தமிழர் தம்பிகளாலேயே பதிவிடப்பட்டிருப்பதும்  தெரியவரும். உதாரணத்திற்கு சில இங்கே. குறிப்பு : இதைப் பகிர்ந்த தனிப்ப...

ICF Act Apprentice பணிகள் இனி தமிழருக்கே : தமிழக வேலை தமிழருக்கே கோஷத்திற்கு கிடைத்த வெற்றி?

படம்
கடந்த சில தினங்களாக வெளிவந்த தினசரிகளில் சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் "பழகுனர்" பயிற்சிக்கு ஆட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அதில் இந்த முறை தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தமிழ்நாட்டில் "தமிழக வேலை தமிழருக்கே" என முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களினால் தான் இது சாத்தியமானது என்றும் உரிமையைக் கேட்டால் தான் கிடைக்கும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையா? போராட்டத்திற்கு கிடைத்த பலனா? என்பதை ஆராயவே இந்த பதிவு. மே 20ம் தேதி அன்று சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் "தொழில் பழகுனர்" திட்டத்தின் கீழ் 992 நபர்களை ஓராண்டு/ஈராண்டு காலத்திற்கு மாத உதவித் தொகையுடன் பயிற்சி வழங்குவதற்காக அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. இதில் ITI முடித்தவர்களுக்கு 512 பணியிடங்களும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 480 பணி...