இடுகைகள்

செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா உணவகத்தை தாக்கியது மர்ம நபர்களா... செய்தி ஊடகங்கள் ஜால்றா ஊடகங்கள் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

படம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் முதல்வராக பதவி கூட ஏற்காத நிலையில், திமுகவினர் அம்மா உணவகத்தை அடித்து உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், புதிய தலைமுறை மற்றும் ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம், "திமுகவிடம் சரணாகதி அடைந்து விட்டனவா தமிழக ஊடகங்கள்" என கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் தமிழக முதல்வராகக் கூட பொறுப்பேற்காத நிலையில், சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்துள்ளனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கி, பெயர் பலகையை கிழித்த இருவர் மீதும் தகுந்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும், இதில் ஈடுபட்ட இருவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் திமுக தலைவர...

அம்மா உணவகம் அடித்து நொறுக்கல்! இது தான் ஸ்டாலின் தரும் விடியலா? ஆட்சிக்கு வந்த உடனே அராஜகத்தில் இறங்கிய திமுகவினர்!

படம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் முதல்வராக பதவி கூட ஏற்காத நிலையில், திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 11.05 மணி வேலையை திமுகவினர் தொடங்கி விட்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களிடையே பேச்சாக உள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. 1996'க்குப் பிறகு தற்போது தான் தனிப்பெரும்பான்மையுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று திமுக ஆட்சியமைக்கும் இந்த சூழலில், தாங்கள் 2006-11 காலத்தைப் போன்ற ஆட்சி நிர்வாகத்தைத் தான் வழங்குவோம் என்பது போல் திமுகவினர் நடந்து கொள்வதாக பேசப்படுகிறது. முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின் போதே, திமுகவின் கொ.ப.செ ஆ.ராசா மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போன்றோர், போலீசார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக நேரடியாகவே மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி வந்தனர். இதானால், திமுக ஆட்சிக்கு வந்தால் 2006-11 கால ஆட்சியைப் போல், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் மீண்டும் அராஜகம் தழைத்தோ...

இனி வக்கீல்கள் கருப்பு அங்கி பயன்படுத்தத் தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

படம்
  பார் கவுன்சில் விதிகளின் படி வக்கீல்களின் ஆடைக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. வக்கீல்களின் அடையாளம் என்பதே அவர்கள் அணியும் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை தான். இதனால் வக்கீல்கள் பெரும்பாலும் கருப்பு அங்கியுடனே காட்சி தருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராகவோ, போலீசுக்கு எதிராகவோ போராட்டம் நடத்தினாலும் கூட கருப்பு அங்கியை விடுவதில்லை. இது பார் கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து பார் கவுன்சில் தொடர்ந்த ஒரு வழக்கில், போராட்டங்களில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கருப்பு அங்கியையும் கழுத்துப்பட்டையையும் வக்கீல்கள் பயன்படுத்தக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாங்களாத் தொட மாட்டோம், ஆனா அவுங்களே கலைச்சிடுவாங்க : கர்நாடக அரசைப் பற்றி எடியூரப்பா அதிரடிப் பேச்சு

படம்
கடந்த 2018'ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பி.எஸ்.எடியரப்பா தலைமையில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் மொத்தம் 224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 104 இடங்கள் மட்டுமே பெற்றதாலும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைப் பெற முடியாமல் போனதாலும் ஆட்சியமைக்க இயலவில்லை. இந்நிலையில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியமைப்பதை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வெறும் 37 தொகுதிகளில் வென்றிருந்த மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக'வின் எடியரப்பா குதிரை பேரங்களில் ஈடுபட்டு ஆட்சியைக் கலைக்க முயல்வாத பலமுறை ஆளும் கூட்டணி தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் பதவியேற்கும் நிகழ்விற்காக டெல்லி சென்ற எடியரப்பா கர்நாடகா திரும்பிய போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் நான். கட்சியின் மத்திய...