இனி வக்கீல்கள் கருப்பு அங்கி பயன்படுத்தத் தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பார் கவுன்சில் விதிகளின் படி வக்கீல்களின் ஆடைக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. வக்கீல்களின் அடையாளம் என்பதே அவர்கள் அணியும் கருப்பு அங்கி மற்றும் கழுத்துப்பட்டை தான். இதனால் வக்கீல்கள் பெரும்பாலும் கருப்பு அங்கியுடனே காட்சி தருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராகவோ, போலீசுக்கு எதிராகவோ போராட்டம் நடத்தினாலும் கூட கருப்பு அங்கியை விடுவதில்லை. இது பார் கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து பார் கவுன்சில் தொடர்ந்த ஒரு வழக்கில், போராட்டங்களில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கருப்பு அங்கியையும் கழுத்துப்பட்டையையும் வக்கீல்கள் பயன்படுத்தக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.