இடுகைகள்

Actor Vivek லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடிகர் விவேக்கின் இறப்பிலும் சாதியை முன்னிறுத்தி இரங்கல்... சாதிவெறியில் ஊறிப்போய் விட்டதா திராவிடர் கழகம்?

படம்
தந்தை பெரியார் தமிழகத்தில் சாதிகளை ஒழிக்க அரும்பாடுபட்டார், சாதிக்கொடுமைகளை களைந்தார், இது பெரியார் மண் என்றெல்லாம் திராவிடர் கழகமும் அவர்களுக்கு ஆதரவாக திராவிடர் முன்னேற்றக் கழகமும் தமிழகத்தில் மார்க்கெட்டிங் செய்வது நாம் அறிந்த ஒன்றே. சில திராவிட வெறியர்கள், பெரியார் மட்டும் இல்லையென்றால் தமிழன் ஆடு மாடு தான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பான் எனக் கூறி புளகாங்கிதப் படுவதும் உண்டு. இப்படி தாங்கள் தான் சமூக நீதி காத்தோம் எனக் கூறிக்கொண்டு உலாவரும் திராவிடர் கழகத்தின் தலைவர் "மானமிகு ஆசிரியர் கி.வீரமணி", திரைப்பிரபலம் மட்டுமல்லாது சமூகத்தின் நன்மைக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட ஒரு பரிசுத்த ஆன்மாவின் மரணத்தை குறிப்பிட்டு வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவரது சாதி பின்புலத்தை குறிப்பிட்டது, திராவிடர் கலகத்தினரின் மனதில் எப்போதும் சாதி குறித்த எண்ணம் மட்டும் தான் ஓடுகிறதா எனும் ஐயம் எழுகிறது. முன்னதாக, சின்னக் கலைவாணர் என அன்போடு போற்றப்படும் நடிகர் விவேக், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த...