இடுகைகள்

Kamarupa லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நரகாசுரரும் தீபாவளியும் - என்ன தான் பிரச்சினை இந்த தமிழ் மண்ணில் (பாகம் 1)

படம்
Guwahati view from Narakasura Hill ஒவ்வொரு ஆண்டு தீபாவளி வரும் போதும் நரகாசுரரை முன் வைத்து தமிழ்நாட்டில் ஒரு இனப் பிரச்சினையே சில தமிழ் தேசிய இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது. உண்மையில் நரகாசுரர் ஒரு தமிழரா? தமிழ்ப் பிரதேசத்தை ஆண்ட மன்னரா? எதற்காக நரகாசுரரை முன் வைத்து தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இந்த இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது? இவற்றையெல்லாம் உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். இந்த பதிவில் நரகாசுரரை பற்றி புராணங்கள், நாட்டுப்புற கதைகள், வரலாற்று எச்சங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தகவல்களை பகிர்கிறேன். நரகாசுரரை பார்க்கும் முன் அவர் ஆட்சி செய்த பிரஜ்யோதிஸ்பூருக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோம்! பிரஜ்யோதிஸ்பூர் எங்க இருக்கு? இன்றைக்கு கவுகாத்தி என்றும், குவ்காத்தி என்றும் நம்மால் அறியப்படும் அசாமின் தலைநகரம் தான் பண்டைய பிரஜ்யோதீஸ்பூர். பிரஜ்யோதீஸ்பூரை யார் ஆண்டார்கள்? இலக்கியத் தகவல்களின் மூலம் பண்டைய அசாம் பகுதியை உள்ளடக்கிய பிரஜ்யோதீஸ்பூரை ஆண்ட முதல் வம்சம் தனவா வம்சம் என்பதும், முதல் அரசர் மகிரங்க தனவா என்பதும் அறியப்படுகிறது. இவர்கள் இமயமலையில் இன்ற...