மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!
சீனாவின் கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் இருந்து எச்10என்3 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு, உலகத்திலேயே முதன் முறையால் ஒரு மனிதரை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த நோயால் தற்போதும் பெரும்பாலான நாடுகளின் வழக்கமான நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த தொற்று நோய், சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சீனா மீது உலக நாடுகள் பலவும் கடும் கோபத்தில் உள்ளன. இந்நிலையில், அதே சீனாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜின்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த 41 வயதான இந்த நோயாளியின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த பாதிப்பு கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் என்றும், தொற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து மிகக் குறைவு ...