மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!
சீனாவின் கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் இருந்து எச்10என்3 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு, உலகத்திலேயே முதன் முறையால் ஒரு மனிதரை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த நோயால் தற்போதும் பெரும்பாலான நாடுகளின் வழக்கமான நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த தொற்று நோய், சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சீனா மீது உலக நாடுகள் பலவும் கடும் கோபத்தில் உள்ளன.
இந்நிலையில், அதே சீனாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜின்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த 41 வயதான இந்த நோயாளியின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த பாதிப்பு கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் என்றும், தொற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து மிகக் குறைவு என்றும் சீன சுகாதார அதிகாரிகள் கூறினர். முன்னதாக நோயாளிக்கு மே 28 அன்று எச்10என்3 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனும் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. தேசிய சுகாதார ஆணையம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டாலும், அந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை விவரிக்கவில்லை. எச்10என்3 மனிதருக்கு பாதிக்கப்படுவது இதற்கு முன்னர் உலகளவில் பதிவாகவில்லை.
எச்10என்3 என்பது கோழிப்பண்ணையில் காணப்படும் குறைந்த வீரியம் கொண்ட வைரஸ் கிருமியாகும். மேலும் இது பெரிய அளவில் பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு. சீனாவில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவின் பலவிதமான விகாரங்கள் உள்ளன. மேலும் கோழிகளுடன் வேலை செய்யும் சிலருக்கு அவ்வப்போது தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுகின்றன.
எச்5என்8 என்பது இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் துணை வகை (பறவை காய்ச்சல் வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது) அதிக பாதிப்பை உண்டாக்கும் ஒரு வைரஸ் கிருமியாகும். எச்5என்8 மனிதர்களுக்கு குறைந்த ஆபத்தை மட்டுமே அளிக்கிறது என்றாலும், இது காட்டு பறவைகள் மற்றும் கோழிகளுக்கு மிகவும் ஆபத்தானது. ஏப்ரல் மாதத்தில், வடகிழக்கு சீனாவின் ஷென்யாங் நகரில் காட்டு பறவைகளில் இந்த நோய்க்கிருமியின் தாக்கம் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment