இடுகைகள்

வட இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட இந்தியாவில் சீறிப்பாயும் வீரமங்கை வேலுநாச்சியார் ரயில்... அசத்தும் இந்திய ரயில்வே... பின்னணி என்ன?

படம்
இந்திய ரயில்வே தமிழகத்தின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும், முதல் இந்திய பெண் சுதந்திரப் போராளி ராணி வேலுநாச்சியாரை சிறப்பிக்கும் வகையில், ரயில் என்ஜின் ஒன்றுக்கு அவரஅது பெயரை வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பான பதிவுகள் வெளியான நிலையில், இது உண்மையான பொய்யா என சிலர் கேட்டதன் அடிப்படையில் இது குறித்த தேடலில், ராணி வேலுநாச்சியார் உட்பட, இந்திய விடுதலை வரலாற்றில் பெரிதாக கண்டுகொள்ளப்படாத சில வீர மங்கைகளின் பெயர் ரயில் என்ஜினுக்கு சூட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. யார் இந்த வேலு நாச்சியார்? தென்னாட்டின் ஜான்சி ராணி என நமது தமிழக வராலற்றில் சொல்லப்பட்டாலும், ஜான்சி ராணி லக்ஷ்மிபாயிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையினரை ஓடஓட விரட்டியவர் ஆவார். 1730 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சமஸ்தானத்து செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் சக்கந்தி முத்தாளுக்கும் மகளாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே மிகவும் வீரத்துடன் விளங்கிய வேலு நாச்சியார் அனைத்து போர்கலைகளிலும் தேர்ச்சி பெற்றதோடு, பிரெஞ்சு, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பன்மொழி திறமை கொண்ட...