இடுகைகள்

Seeman லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ICF Act Apprentice பணிகள் இனி தமிழருக்கே : தமிழக வேலை தமிழருக்கே கோஷத்திற்கு கிடைத்த வெற்றி?

படம்
கடந்த சில தினங்களாக வெளிவந்த தினசரிகளில் சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் "பழகுனர்" பயிற்சிக்கு ஆட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அதில் இந்த முறை தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தமிழ்நாட்டில் "தமிழக வேலை தமிழருக்கே" என முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களினால் தான் இது சாத்தியமானது என்றும் உரிமையைக் கேட்டால் தான் கிடைக்கும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையா? போராட்டத்திற்கு கிடைத்த பலனா? என்பதை ஆராயவே இந்த பதிவு. மே 20ம் தேதி அன்று சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் "தொழில் பழகுனர்" திட்டத்தின் கீழ் 992 நபர்களை ஓராண்டு/ஈராண்டு காலத்திற்கு மாத உதவித் தொகையுடன் பயிற்சி வழங்குவதற்காக அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. இதில் ITI முடித்தவர்களுக்கு 512 பணியிடங்களும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 480 பணி...

சீமான் பேச்சு - அரசியல் அபிலாஷைக்கா? இனத்தின் எழுச்சிக்கா?

தான் பீலா விடுகிறேன் என்பதை வெளிப்படையாகவே சீமான் ஒப்புக் கொண்டாலும், அண்ணனின் விழுதுகள் என்று சிலர் அண்ணன் பேசுவதை உண்மையென்று நம்பி உணர்ச்சிப் பிழம்பாக திரிகின்றனர். அப்படிப்பட்ட தம்பிகள் சிலர் பகிர்ந்த காணொளி தான். இதில் அண்ணன் என்ன சொல்கிறார் என்றால் தேர்தலுக்காகத்தான் CRPF படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்கிறார். அதாவது தேர்தலுக்காக நடத்தப்பட்டது என்றால் அதை மோடி தான் நடத்தியுள்ளார் என்று கூட நிறைய தம்பிகள் உளறிக் கொண்டுள்ளார்கள். சரி அந்த தம்பிகள் அப்படித்தான். அவர்கள் அண்ணன் "இந்தியா என்பதே கற்பனை, தமிழ் தேசியமே நமக்கானது , இனத்தின் விடுதலை" என்று பேசினாலும் "ஜே!" சொல்வார்கள். இவர்கள் எதிர்க்கும் "இந்திய தேசியம் தேர்தல் நடத்தினால் அதில் பங்கெடுத்து ஆட்சியைப் பிடிப்போம்" என்றாலும் முன்பு இந்திய தேசியத்தை எதிர்த்து விட்டு பிறகு அதே தேசியம் நடத்தும் தேர்தலில் பங்கேற்பது அறிவிலித்தனமாக இல்லையா? என்று சிந்திக்காமல் "ஜே" சொல்லும் கூட்டம். சரி விசயத்திற்கு வருவோம். தேர்தலுக்காகத் தான் தாக்குதலை பாகிஸ்தானிலிருந்து வந்து திட்...

சீமான் அண்ணாச்சியும் நாயக்கர்களும் - அண்ணனுக்கு என்ன தான் ஆச்சு!

படம்
சிவகங்கையிலிருந்து சினிமா ஆசையின் காரணமாக சென்னை வந்த சீமான் தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு பெரியாரியவாதியாக காட்டிக் கொண்டார். பின்னர் தமிழர் தேசியம் என்றார், வீரத் தமிழராக நாயக்கர்களைக் கை காட்டி நம்மை அவர்கள் அடிமைப் படுத்தி ஆண்டார்கள், அவர்கள் வந்தேரிகள் என்று நமது உணர்ச்சியை தூண்டினார். பிறகு சில காலம் கழித்து நாம் தமிழரான பிறகு நாயக்க வாரிசுகளை "என் அப்பத்தா, என் அப்பச்சி" என வீர வசனம் பேசி உணர்ச்சியை தூண்டுகிறார். உண்மையில் இவரின் கொள்கை தான் என்ன? யாருக்கு தெரியும், நேத்து நாயக்கர்களை திட்டி, இன்று ஆராதிப்பதைப் போல நாளைக்கு வந்தேரிகளையும் ஆராதிக்கலாம். ஒரு கட்சியென்றால் அதன் தலைமைக்கு ஒரு கொள்கை இருக்கும். அதன் வழி நடப்பவர்கள் அந்த கட்சியில் இணைந்து செயல்படுவர். கட்சியை தொடங்கியவருக்கே என்ன கொள்கை, கோட்பாடு என்பது தெரியாத போது இவரை நம்பி பின்செல்லுபவர்கள் "ஏன்னே இப்படி?" என்று கேட்கிறார்களா என்று பார்த்தால் அவர்கள் எளிய தமிழ்ப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த மாதிரியான எளிய தமிழ்ப் பிள்ளைகளை பார்க்கும் போது, இங்கு இணை...