ICF Act Apprentice பணிகள் இனி தமிழருக்கே : தமிழக வேலை தமிழருக்கே கோஷத்திற்கு கிடைத்த வெற்றி?
கடந்த சில தினங்களாக வெளிவந்த தினசரிகளில் சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் "பழகுனர்" பயிற்சிக்கு ஆட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அதில் இந்த முறை தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தமிழ்நாட்டில் "தமிழக வேலை தமிழருக்கே" என முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களினால் தான் இது சாத்தியமானது என்றும் உரிமையைக் கேட்டால் தான் கிடைக்கும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையா? போராட்டத்திற்கு கிடைத்த பலனா? என்பதை ஆராயவே இந்த பதிவு.
மே 20ம் தேதி அன்று சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் "தொழில் பழகுனர்" திட்டத்தின் கீழ் 992 நபர்களை ஓராண்டு/ஈராண்டு காலத்திற்கு மாத உதவித் தொகையுடன் பயிற்சி வழங்குவதற்காக அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது.
இதில் ITI முடித்தவர்களுக்கு 512 பணியிடங்களும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 480 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ITI முடித்தவர்களுக்கு ஓராணரடு பயிற்சியும், 10 வகுப்பு தேர்ச்சிக்கு 1 ஆண்டு 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான மாதாந்திர உதவித் தொகையாக ₹5700'லிருந்து ₹7350 வரை வழங்கப்படுகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பம் 20 மே 2019'லிருந்து 24 ஜூன் 2019 வரை செயல்பாட்டில் இருக்கும். விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்க மற்றும் மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
சரி நாம் விசயத்திற்கு வருவோம். அறிவிப்பாணையில் தமிழர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளதா?
அறிவிப்பாணையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு அதற்கான அத்தாட்சியை வைத்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் ரயில்வேயில் வேலை செய்யும்/செய்த வாரிசுகளுக்கு இந்த விதிமுறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ரயில்வேயில் வேலை செய்த/செய்யும் எந்த மாநிலத்தவராக இருந்தாலும் அவர்கள் அதற்கான ஆதாரங்களை அதிகாரிகளின் சான்றிதழுடன் சமர்ப்பித்தால் போதும்.
ரயில்வேயில் வேலை செய்த/செய்யும் நபர்களின் வாரிசுகளுக்கு என்று தனியாக எந்த இட ஒதுக்கீடும் கிடையாது. அதே போல தமிழ்நாட்டு நேரடி விண்ணப்பதாரர்களுக்கும் எந்த தனிப்பட்ட இட ஒதுக்கீடும் (OC/OBC/SC/ST இட ஒதுக்கீட்டைத் தவிர) கிடையாது. விண்ணப்பிக்கும் நபர்களில் கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே ஆட்சேர்க்கை நடைபெறும்.
சரி, இதைப்பற்றி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் என்ன பேசப்படுகிறது.
இப்படி பல்வேறு தரப்பிலிருந்தும் "தமிழக வேலை தமிழருக்கே" என இவர்கள் முன்வைத்த போராட்டங்களின் தொடர்ச்சியாகத்தான் இந்த மாற்றம் நடைபெற்றிருப்பதாக மக்கள் மன்றத்தில் நிறுவ முயல்கின்றனர்.
சமீபத்தில் தமிழக இணைய இளைஞர்களிடம் பரவலாக நன்மதிப்பைப் பெற்று வரும் "YouTurn" எனும் போலிச் செய்திகளுக்கு எதிராக களமாடுவதாக கூறிக்கொள்ளும் ஊடகமும் இதை ஆமோதிக்கும் வகையிலேயே கருத்து வெளியிட்டுள்ளது நம்மூரில் ஊடகங்கள் எவ்வளவு திறமையாக செயல்படுகின்றன என்பதற்கு உதாரணம்.
"You Turn"ல் வெளிவந்த கட்டுரையை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
சரி, இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? "தமிழக வேலை தமிழருக்கே" என இவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றியா இது? உண்மை தான் என்ன?
வாருங்கள் பார்ப்போம்.
2019'ம் ஆண்டு அதாவது இந்த முறை வெளிவந்த ஆட்சேர்க்கை அறிவிப்பாணையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறியுள்ளார்கள் (ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு விதிவிலக்கு) என்று பார்த்தோமல்லவா, அதே போல் கடந்த 2018 மற்றும் 2017'ம் ஆண்டுகளில் "பழகுனர்" பயிற்சிக்கான ஆட சேர்க்கை நடத்தியிருப்பார்கள் தானே, அதில் எவ்வாறு உள்ளது என்று பார்ப்போம்.
2018'ம் ஆண்டுக்கான அறிவிப்பாணையை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
மொத்தம் 707 பணிகளுக்காக நடந்த இந்த ஆட்தேர்விலும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இதிலும் வழக்கமான ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு மட்டும் விதிவிலக்கு
அடுத்து 2017'ம் ஆண்டுக்கான அறிவிப்பாணையை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
மொத்தம் 574 பணியிடங்களுக்கு நடந்த இந்த ஆட்தேர்விலும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இதிலும் ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு மட்டும் விதிவிலக்கு.
ஆக கடந்த சில ஆண்டுகளை எடுத்துக் கொண்டாலும் கூட, முன்பு பின்பற்றப்பட்ட அதே விதிமுறைகள் தான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது.
இது "தமிழக வேலை தமிழருக்கே" என்று கூறும் போராளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி அல்ல.
தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் போராட மட்டுமே செய்வார்கள். தீர்வுகளை எதுவும் பெற்றுத்தர மாட்டார்கள் (சில விதிவிலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் உணர்ச்சியைத் தூண்டி சுயலாபம் அடைய மாட்டார்கள், அவர்கள் யாரென்று உணர்ந்து கொள்வது நம் கையிலேயே உள்ளது). வழக்கமாக கிடைக்கும் தீர்வுகளையும் தங்களுடைய போராட்டம் மூலம் தான் கிடைத்தது என உரிமை கொண்டாட மட்டும் வருவார்கள்.
இது போன்ற போராளி அரசியல்வாதிகளைப் பார்த்தால் சிரித்து விட்டு கடந்து விடுங்கள்.
பொதுவாக தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் தமிழர்களின் அலட்சியப் போக்கு தான். தமிழகத்தில் TNPSC, TRB, TET'க்கு கொடுக்கும் முக்கியத்துவம் UPSC, SSC, RRB, IBPS போன்றவற்றிற்கு கொடுப்பதில்லை.
உதாரணத்திற்கு ரயில்வே வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் காட்டும் ஆர்வத்தைப் பற்றி் RTI தகவலுடன் ரயில்வே யூனியன் உதவி தலைவர் இளங்கோ அவர்கள் கூறியது பிபிசியில் வெளிவந்துள்ளது. அதைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.
தமிழக இளைஞர்களிடையே உள்ள அலட்சியப் போக்கை நீக்கி அவர்களுக்கு முறையான பயிற்சியும் ஊக்கமும் கொடுத்தால் மீண்டும் தமிழர்கள் மத்திய அரசுப் பணிகளின் அனைத்து மட்டங்களிலும் கோலோச்சும் நிலை வரும்.
இல்லை சீமான், வேல்முருகன் போன்ற நபர்களின் பின்னால் சென்றால், "முகநூலில் கார்ப்பரேட்டுகள் அடிமைப்படுத்துகிறார்கள் என பதிவிட்டு விட்டு TCS போன்ற கார்ப்பரேட்டுகளிடமிருந்தே மாதச்சம்பளம் பெற்றுக்கொண்டிருக்க வேண்டியது தான்".
நாம் அறிவிலித் தனமாக செயல்படுவதைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட முயற்சிப்போம்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment