இடுகைகள்

இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!

படம்
கடந்த 24 மாதங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சீன உளவாளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டிருப்பது, சீனா குறித்த இந்தியாவின் பார்வையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துகிறது. சமீப காலங்களில் ஹவாலா ஆபரேட்டர்கள், ஆன்லைன் லோன் ஆப் செயலிகள் மூலம் நடத்தப்படும் பண மோசடி மோசடி மற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் மூலம் சீன உளவாளிகள் இந்தியாவை உளவு பார்ப்பதாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு, மத்திய குற்றப்பிரிவின் கர்நாடக சைபர் கிரைம் பிரிவு ரூ 290 கோடி ஹவாலா மோசடியை முறியடித்ததுடன், இரண்டு சீனர்கள், இரண்டு திபெத்திய நாட்டினர், மற்றும் ஷெல் நிறுவனங்களின் இயக்குநர்களாக செயல்பட்டு வந்த 5 பேர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளது. சி.சி.பி.எஸ் சி.ஆர் எண் 08/2021 யு / எஸ் 66 (டி) ஐடி சட்டம் & 420 ஐபிசியின் கீழ் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் போது, ​​கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனஸ் அகமது இந்த ஹவாலா & பணமோசடி மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபர் என்பது கண்டறியப்பட்டது. விசாரணையின் போது வெளிச...

100 சதவீத தடுப்பூசி..! அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் முதல் கிராமம் எது தெரியுமா..?

படம்
ஜம்மு-காஷ்மீர் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்ட நாட்டின் முதல் கிராமமாக மாறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள வெயன் கிராமம் அதன் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கான 100 சதவீத தடுப்பூசியை செலுத்திய முதல் கிராமமாக மாறியுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு விரைவான வேகத்தில் தடுப்பூசி போடுவதற்கான 10 அம்ச நிகழ்ச்சி நிரலாக திட்டமிட்ட ஜம்மு-காஷ்மீர் மாதிரியின் கீழ் வெயன் கிராமத்தில் இது சாத்தியமாகியுள்ளது. "பந்திபோரா மாவட்டத்தில் உள்ள கிராமமான வெயன், 18 வயதிற்கு மேற்பட்ட முழு மக்கள் தொகைக்கும் தடுப்பூசி போடப்பட்ட நாட்டின் முதல் கிராமமாக மாறியுள்ளது" என்று ஜம்மு-காஷ்மீர் பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு காரணமாக, சுகாதார அதிகாரிகள் கிராமத்தை அடைய 18 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. பந்திபோரா மாவட்ட தலைமையகத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. மேலும் சரியான சாலை கூட இல்லை எ...

2024’ல் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் : மோடி அரசுடன் மோதுகிறாரா பிரணாப் முகர்ஜி?

படம்
  முன்பொரு காலத்தில் காங்கிரஸ் இந்தியாவில் கோலோச்சிய போது, பல்வேறு கால கட்டங்களில் நிதி அமைச்சகத்திலும், பின்பு இந்திய ஜனாதிபதியாகவும் பணியாற்றிய திரு பிரணாப் முகர்ஜி முன்பு மோடி அரசை புகழ்ந்து வந்த நிலையில் தற்போது விமர்சனத்தை வைத்திருப்பது டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரம் கூடிய விரைவில் 5 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று கூறியிருந்தது. இதையடுத்து தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ‘இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியனாக டாலர் அளவிற்கு உயர தற்போதைய அரசு மட்டம் காரணமல்ல. முன்னதாக இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை ஆண்ட காங்கிரசும் அதன் ஆட்சியாளர்களும் போட்ட வலுவான அடித்தளமும் முக்கிய காரணம். இதை மறுத்து 55 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி செய்ததை விமர்சிப்பவர்கள் சுதந்திரத்தின் போது நாடு இருந்த நிலையையும் தற்போது நாடு இருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாட்டிற்காக தொண்டாற்றிய பலர் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தனர். ஆனால...

நாங்களாத் தொட மாட்டோம், ஆனா அவுங்களே கலைச்சிடுவாங்க : கர்நாடக அரசைப் பற்றி எடியூரப்பா அதிரடிப் பேச்சு

படம்
கடந்த 2018'ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பி.எஸ்.எடியரப்பா தலைமையில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் மொத்தம் 224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 104 இடங்கள் மட்டுமே பெற்றதாலும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைப் பெற முடியாமல் போனதாலும் ஆட்சியமைக்க இயலவில்லை. இந்நிலையில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியமைப்பதை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வெறும் 37 தொகுதிகளில் வென்றிருந்த மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக'வின் எடியரப்பா குதிரை பேரங்களில் ஈடுபட்டு ஆட்சியைக் கலைக்க முயல்வாத பலமுறை ஆளும் கூட்டணி தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் பதவியேற்கும் நிகழ்விற்காக டெல்லி சென்ற எடியரப்பா கர்நாடகா திரும்பிய போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் நான். கட்சியின் மத்திய...