நாங்களாத் தொட மாட்டோம், ஆனா அவுங்களே கலைச்சிடுவாங்க : கர்நாடக அரசைப் பற்றி எடியூரப்பா அதிரடிப் பேச்சு

கடந்த 2018'ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பி.எஸ்.எடியரப்பா தலைமையில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால் மொத்தம் 224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 104 இடங்கள் மட்டுமே பெற்றதாலும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைப் பெற முடியாமல் போனதாலும் ஆட்சியமைக்க இயலவில்லை.
இந்நிலையில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியமைப்பதை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வெறும் 37 தொகுதிகளில் வென்றிருந்த மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாஜக'வின் எடியரப்பா குதிரை பேரங்களில் ஈடுபட்டு ஆட்சியைக் கலைக்க முயல்வாத பலமுறை ஆளும் கூட்டணி தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் பதவியேற்கும் நிகழ்விற்காக டெல்லி சென்ற எடியரப்பா கர்நாடகா திரும்பிய போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் நான். கட்சியின் மத்தியத் தலைமையை சந்தித்த போது என்னிடம் கர்நாடக அரசை கவிழ்க்கும் முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம்." என அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.
ஏஎன்ஐ ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


ஏஎன்ஐ செய்திக் குறிப்பில் மேலும் காங்கிரசின் சித்தராமையாவே தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் சில சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பக்கம் அனுப்புவார் என்றும், காங்கிரஸ் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு ஆட்சியை கலைத்துக் கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும், அதற்கான காலம் வரும். வரை தாங்கள் காத்திருப்போம் என்றும் எடியூரப்பா கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!