இடுகைகள்

World லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

படம்
சீனாவின் கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் இருந்து எச்10என்3 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு, உலகத்திலேயே முதன் முறையால் ஒரு மனிதரை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.  சீனாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த நோயால் தற்போதும் பெரும்பாலான நாடுகளின் வழக்கமான நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த தொற்று நோய், சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சீனா மீது உலக நாடுகள் பலவும் கடும் கோபத்தில் உள்ளன. இந்நிலையில், அதே சீனாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜின்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த 41 வயதான இந்த நோயாளியின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த பாதிப்பு கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் என்றும், தொற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து மிகக் குறைவு ...

பிரிட்டனில் தொடங்கியது கொரோனா மூன்றாவது அலை..? அரசின் ஆலோசகர் டாக்டர் ரவி குப்தா எச்சரிக்கை..!

படம்
பிரிட்டிஷ் அரசின் விஞ்ஞான ஆலோசகர், பிரிட்டன் மூன்றாவது கொரோனா அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார். பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 3,383 கொரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், சமீபத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா, புதிய பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இந்தியா காணப்படும் புதிய வகை மாறுபாடு பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சியை தூண்டிவிட்டது எனத் தெரிவித்துள்ளார். கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. முதல் அலையின் காரம்பக்கட்டத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதிக உயிரிழப்புகளை சந்தித்தது. பின்னர் இரண்டாவது அலையின் போதும், மிகக் கடுமையான சேதாரத்தை எதிர்கொண்டு, சமீபத்திய மாதங்களில் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தது. இந்நிலையில், அங்கு தொடர்ச்சியாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது அந்நாட்டு விஞ்ஞானி, கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்...

இஸ்லாம் தோன்றிய நாட்டில் இந்துமத புராணங்கள்... ராமாயணம், மஹாபாரதம் கற்கும் சவூதி மாணவர்கள்!

படம்
இஸ்லாமிய தேசமான சவூதி அரேபியா மாறிவரும் உலகளாவிய சூழலின் மத்தியில் தன்னை மறுவடிவக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.  சன்னி பிரிவு முஸ்லீம்களின் நாடான சவூதி அரேபியா கல்வித்துறைக்காக ஒரு புதிய “விஷன் -2030”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாணவர்களுக்கு கலாச்சார படிப்புகளின் கீழ் மற்ற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் கற்பிக்கப்படுகிறது.  இதில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.  சவூதி உலகளாவிய வளர்ச்சியின் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள “விஷன் -2030” இன் படி, இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  சவூதியின் முதல் யோகா ஆசிரியரும், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ பட்டத்தையும் வென்றுள்ள நவுப்-அல்-மார்வாய், தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளதன் மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.  படத்தைப் பகிர்ந்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அவர், “சவூதி அரேபியாவின் புதிய விஷன்-2030 தாராளமயமான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தை உருவாக்க உதவும். சமூக ஆய்வுகள் புத்தகத்தில் இன்று எனது மகன...