பிரிட்டனில் தொடங்கியது கொரோனா மூன்றாவது அலை..? அரசின் ஆலோசகர் டாக்டர் ரவி குப்தா எச்சரிக்கை..!


பிரிட்டிஷ் அரசின் விஞ்ஞான ஆலோசகர், பிரிட்டன் மூன்றாவது கொரோனா அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார். பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 3,383 கொரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், சமீபத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா, புதிய பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இந்தியா காணப்படும் புதிய வகை மாறுபாடு பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சியை தூண்டிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. முதல் அலையின் காரம்பக்கட்டத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதிக உயிரிழப்புகளை சந்தித்தது. பின்னர் இரண்டாவது அலையின் போதும், மிகக் கடுமையான சேதாரத்தை எதிர்கொண்டு, சமீபத்திய மாதங்களில் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தது.

இந்நிலையில், அங்கு தொடர்ச்சியாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது அந்நாட்டு விஞ்ஞானி, கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் பிரிட்டன் இருப்பதாக தெரிவித்துள்ளது மக்களின் பீதியை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அவர், "நிச்சயமாக பாதிப்புகளின் எண்ணிக்கை இந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. எல்லா அலைகளும் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகளின் பின்னணியில் இருந்து, பின்னர் வெடிக்கும் தன்மையுடன் தொடங்குகின்றன. எனவே இங்கே முக்கியமானது என்னவென்றால், நாம் இங்கு பார்ப்பது அடுத்த அலையின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

எனினும், பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணிகளில் உள்ள முன்னேற்றம், இந்த அலை வேகமெடுக்க முந்தையதை விட அதிக நேரம் எடுக்கும். சில காலமாக தடுப்பூசி இருப்பதால் மக்களிடையே தவறான பாதுகாப்பு உணர்வு இருக்கலாம். அதுதான் எங்கள் கவலை" என்று அரசாங்கத்தின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழுவின் (நெர்வ்டாக்) உறுப்பினராகவும் உள்ள ரவி குப்தா கூறினார்.

இதனால் ஜூன் 21 அன்று இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரும் திட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!