பிரிட்டனில் தொடங்கியது கொரோனா மூன்றாவது அலை..? அரசின் ஆலோசகர் டாக்டர் ரவி குப்தா எச்சரிக்கை..!
பிரிட்டிஷ் அரசின் விஞ்ஞான ஆலோசகர், பிரிட்டன் மூன்றாவது கொரோனா அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார். பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 3,383 கொரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், சமீபத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா, புதிய பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இந்தியா காணப்படும் புதிய வகை மாறுபாடு பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சியை தூண்டிவிட்டது எனத் தெரிவித்துள்ளார். கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. முதல் அலையின் காரம்பக்கட்டத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதிக உயிரிழப்புகளை சந்தித்தது. பின்னர் இரண்டாவது அலையின் போதும், மிகக் கடுமையான சேதாரத்தை எதிர்கொண்டு, சமீபத்திய மாதங்களில் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தது. இந்நிலையில், அங்கு தொடர்ச்சியாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது அந்நாட்டு விஞ்ஞானி, கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்...