கேரள சட்டசபையில் ஓங்கி ஒலித்த தமிழ்... தேவிகுளம் தொகுதி எம்எல்ஏ ராஜா தமிழில் பதவியேற்பு!
கேரள தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வான ராஜா, கேரள சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாக தமிழில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது கேரளாவில் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி கேரள மாநிலத்தில் நடைபெற்றது. மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி 99 இடங்களை வென்றது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி மீதமுள்ள 41 இடங்களை வென்றது. இந்த சூழலில், கேரள வரலாற்றில் இரண்டாவது முறையாக, பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசாங்கம் 20 ஆம் தேதி பதவியேற்றது. 15 வது சட்டமன்றத்தின் முதல் அமர்வு நேற்று தொடங்கியது. 140 எம்.எல்.ஏ.க்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரஹீம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆங்கில அகர வரிசைப்படி உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்எல்ஏ ராஜா தமிழில் பதவியேற்றார். அவர் கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் படித்து வழக...