100 சதவீத தடுப்பூசி..! அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் முதல் கிராமம் எது தெரியுமா..?
ஜம்மு-காஷ்மீர் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்ட நாட்டின் முதல் கிராமமாக மாறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள வெயன் கிராமம் அதன் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கான 100 சதவீத தடுப்பூசியை செலுத்திய முதல் கிராமமாக மாறியுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு விரைவான வேகத்தில் தடுப்பூசி போடுவதற்கான 10 அம்ச நிகழ்ச்சி நிரலாக திட்டமிட்ட
ஜம்மு-காஷ்மீர் மாதிரியின் கீழ்
வெயன் கிராமத்தில் இது சாத்தியமாகியுள்ளது.
"பந்திபோரா மாவட்டத்தில் உள்ள கிராமமான வெயன், 18 வயதிற்கு மேற்பட்ட முழு மக்கள் தொகைக்கும் தடுப்பூசி போடப்பட்ட நாட்டின் முதல் கிராமமாக மாறியுள்ளது" என்று ஜம்மு-காஷ்மீர் பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
இப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு காரணமாக, சுகாதார அதிகாரிகள் கிராமத்தை அடைய 18 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. பந்திபோரா மாவட்ட தலைமையகத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. மேலும் சரியான சாலை கூட இல்லை என்று சுகாதாரத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பந்திபோராவின் தலைமை மருத்துவ அதிகாரி பஷீர் அகமது கான், கிராமத்தில் இணைய வசதி இல்லை என்று கூறினார். எனவே, நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் செய்வது போல தடுப்பூசிக்கான முன்பதிவுகள் இங்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கிராமத்தில் மொத்தம் 362 பயனாளிகள் தடுப்பூசி பெற்றனர். இது கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்ட நாட்டின் முதல் கிராமமாகும்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தபோதிலும், 45+ வயதிற்குட்பட்டவர்களுக்கு யூனியன் பிரதேசம் முழுவதும் 70 சதவீத தடுப்பூசியை செலுத்தியுள்ளது. இது தேசிய சராசரியை விட இரு மடங்காகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment