சீமான் பேச்சு - அரசியல் அபிலாஷைக்கா? இனத்தின் எழுச்சிக்கா?

தான் பீலா விடுகிறேன் என்பதை வெளிப்படையாகவே சீமான் ஒப்புக் கொண்டாலும், அண்ணனின் விழுதுகள் என்று சிலர் அண்ணன் பேசுவதை உண்மையென்று நம்பி உணர்ச்சிப் பிழம்பாக திரிகின்றனர்.
அப்படிப்பட்ட தம்பிகள் சிலர் பகிர்ந்த காணொளி தான்.

இதில் அண்ணன் என்ன சொல்கிறார் என்றால் தேர்தலுக்காகத்தான் CRPF படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்கிறார். அதாவது தேர்தலுக்காக நடத்தப்பட்டது என்றால் அதை மோடி தான் நடத்தியுள்ளார் என்று கூட நிறைய தம்பிகள் உளறிக் கொண்டுள்ளார்கள். சரி அந்த தம்பிகள் அப்படித்தான். அவர்கள் அண்ணன் "இந்தியா என்பதே கற்பனை, தமிழ் தேசியமே நமக்கானது , இனத்தின் விடுதலை" என்று பேசினாலும் "ஜே!" சொல்வார்கள். இவர்கள் எதிர்க்கும் "இந்திய தேசியம் தேர்தல் நடத்தினால் அதில் பங்கெடுத்து ஆட்சியைப் பிடிப்போம்" என்றாலும் முன்பு இந்திய தேசியத்தை எதிர்த்து விட்டு பிறகு அதே தேசியம் நடத்தும் தேர்தலில் பங்கேற்பது அறிவிலித்தனமாக இல்லையா? என்று சிந்திக்காமல் "ஜே" சொல்லும் கூட்டம்.
சரி விசயத்திற்கு வருவோம்.
தேர்தலுக்காகத் தான் தாக்குதலை பாகிஸ்தானிலிருந்து வந்து திட்டமிட்டு நடத்தினார்களா?
நடத்தியவனே காணொளி வெளியிட்டு தான் யார் என்பதை வெளிக்காட்டியுள்ளான். கொலைத் தாக்குதலை நடத்தியவன் பாகிஸ்தானிலிருந்து வந்தவன் அல்ல மாறாக அவன் ஒரு காஷ்மீரி என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவன் யார்? அவன் பிண்ணனி என்ன? என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அடுத்து தேர்தல் சமயத்தில் மட்டுமா குண்டு வெடிக்கப்பட்டது?. அதையும் பார்ப்போம்.
அரசின் தரவுகளை எடுத்துப் பார்த்தாலே கடந்த 2014லிருந்து எவ்வளவு தீவிரவாதத் தாக்குதல்கள் காஷ்மீரில் நடந்துள்ளது என்ற விவரம் தெரியவரும்.
அதுவும் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திக் கொண்டிருக்கிற தீவிரமான வேட்டையை தினசரி முக்கியமில்லாத செய்தியாக நாம் கடந்து விடுவதால் இந்த தாக்குதல் தேர்தலுக்காக நடத்தப்பட்டது என்று இவர்களால் எளிதில் நம்பவைக்க முடிகிறது.
பாகிஸ்தானிலிருந்து வந்து சுட்டுக் கொன்றால் தான் உயிரா? தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 உயிர்கள் உயிர் இல்லையா? இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட 840 உயிர் இல்லையா? ஆந்திர போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்கள் உயிர் இல்லையா?
சத்தமாக பேசினால் இவர்கள் பேசுவது சரியாகி விடுமா? யார் இப்ப அதெல்லாம் உயிர் இல்லனு சொன்னது? காஷ்மீர் தாக்குதலுக்காக பொங்குவதைப் போல இதற்கும் பொங்கிக் கொண்டுதான் உள்ளார்கள்.
அப்படியே உணர்ச்சிய தூண்டி வியாபாரம் செய்வது அண்ணனின் தொழில் என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம் தம்பிகளே!
840 மீனவர்கள் உயிரை இந்திய அரசு முக்கியமாக மதித்ததால் தான் இன்று அது போன்ற எந்த மீனவ உயிர்பலியும் வங்கக் கடலில் நிகழாமல் அரசு பார்த்துக் கொள்கிறது.
அப்படிப் பார்த்துக் கொள்வதால் அண்ணன் போன்றவர்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதால் இவர்கள் #GoBack சொல்லி எதிர்க்க நம்மை தூண்டுகிறார்கள்.
சற்று சிந்தித்து பாருங்கள். 840 உயிர்களைக் கொன்ற போது ஆட்சியில் இருந்த மற்றும் 1,50,000 தமிழர்களை ஈழத்தில் கொன்றொழித்தார்கள் என்று சொல்லப்படும் கட்சியின் தலைமை தமிழகம் வந்தபோது தமிழின விரோதி என்று #GoBack சொல்ல தூண்டப்பட்டோமா?
அதே போல் 20பேர் உயிரை துச்சமாக மதித்து கொன்றார்கள் என்று சொல்லப்படும் ஆந்திர தலைமை தமிழகம் வந்தபோதும் #GoBack சொல்ல தூண்டப்பட்டோமா?
இல்லை குறைந்தபட்சம் இவர்களுக்கு கருப்புக்கொடி காட்டத்தான் தூண்டப்பட்டோமா?

இல்லை. ஏனெனில் அவர்கள் இருந்தால் தான் தங்கள் அரசியல் வியாபாரம் செழிக்கும் என்பதை நன்குணர்ந்த அவர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள் தம்பி.

பிறகு உங்களுக்கு அண்ணனின் அரசியல் அபிலாஷைகள் புரிந்து விடும். திராவிடத்தின் வளர்ப்புப் பிள்ளைகளாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்று.

தூத்துக்குடியில் அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகட்டும், ஜல்லிக்கட்டின் கடைசி கட்டத்தில் நடந்த வன்முறையாகட்டும், எல்லாவற்றின் பின்னும் கண்டிப்பாக அரசியல் இருக்கும். அதை உணர முயற்சிப்போம். அதை விடுத்து கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையுமே மெய் என்று நம்பி வாழ்ந்தோமானால் நிச்சயமாக எந்த மாற்றத்தையும் காண முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!