சீமான் அண்ணாச்சியும் நாயக்கர்களும் - அண்ணனுக்கு என்ன தான் ஆச்சு!


சிவகங்கையிலிருந்து சினிமா ஆசையின் காரணமாக சென்னை வந்த சீமான் தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு பெரியாரியவாதியாக காட்டிக் கொண்டார். பின்னர் தமிழர் தேசியம் என்றார்,
வீரத் தமிழராக நாயக்கர்களைக் கை காட்டி நம்மை அவர்கள் அடிமைப் படுத்தி ஆண்டார்கள், அவர்கள் வந்தேரிகள் என்று நமது உணர்ச்சியை தூண்டினார்.
பிறகு சில காலம் கழித்து நாம் தமிழரான பிறகு நாயக்க வாரிசுகளை "என் அப்பத்தா, என் அப்பச்சி" என வீர வசனம் பேசி உணர்ச்சியை தூண்டுகிறார்.

உண்மையில் இவரின் கொள்கை தான் என்ன?

யாருக்கு தெரியும், நேத்து நாயக்கர்களை திட்டி, இன்று ஆராதிப்பதைப் போல நாளைக்கு வந்தேரிகளையும் ஆராதிக்கலாம். ஒரு கட்சியென்றால் அதன் தலைமைக்கு ஒரு கொள்கை இருக்கும். அதன் வழி நடப்பவர்கள் அந்த கட்சியில் இணைந்து செயல்படுவர். கட்சியை தொடங்கியவருக்கே என்ன கொள்கை, கோட்பாடு என்பது தெரியாத போது இவரை நம்பி பின்செல்லுபவர்கள் "ஏன்னே இப்படி?" என்று கேட்கிறார்களா என்று பார்த்தால் அவர்கள் எளிய தமிழ்ப் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் இந்த மாதிரியான எளிய தமிழ்ப் பிள்ளைகளை பார்க்கும் போது, இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அண்ணன் கடைசியாக செய்வதைப் போலத்தான் செய்து விட்டு கடந்துவிடத் தோன்றுகிறது.

சரி நாயக்கர்கள் உண்மையாகவே தமிழர்களை அடிமைப்படுத்தி ஆண்டார்களா?

வரலாற்றைத் தேடி படியுங்கள்......

வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவில் இறை மார்க்கத்திற்பு எதிரான வெறி அதிகம் இல்லாது இருப்பதற்கு இந்த நாயக்கர்களும், அவர்களின் எஜமானர்களான விஜயநகரத்து அரசர்களும் ஒரு வகையில் காரணம் என்றால் அது மிகையாகாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!