நடிகர் விவேக்கின் இறப்பிலும் சாதியை முன்னிறுத்தி இரங்கல்... சாதிவெறியில் ஊறிப்போய் விட்டதா திராவிடர் கழகம்?

தந்தை பெரியார் தமிழகத்தில் சாதிகளை ஒழிக்க அரும்பாடுபட்டார், சாதிக்கொடுமைகளை களைந்தார், இது பெரியார் மண் என்றெல்லாம் திராவிடர் கழகமும் அவர்களுக்கு ஆதரவாக திராவிடர் முன்னேற்றக் கழகமும் தமிழகத்தில் மார்க்கெட்டிங் செய்வது நாம் அறிந்த ஒன்றே. சில திராவிட வெறியர்கள், பெரியார் மட்டும் இல்லையென்றால் தமிழன் ஆடு மாடு தான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பான் எனக் கூறி புளகாங்கிதப் படுவதும் உண்டு.

இப்படி தாங்கள் தான் சமூக நீதி காத்தோம் எனக் கூறிக்கொண்டு உலாவரும் திராவிடர் கழகத்தின் தலைவர் "மானமிகு ஆசிரியர் கி.வீரமணி", திரைப்பிரபலம் மட்டுமல்லாது சமூகத்தின் நன்மைக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட ஒரு பரிசுத்த ஆன்மாவின் மரணத்தை குறிப்பிட்டு வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவரது சாதி பின்புலத்தை குறிப்பிட்டது, திராவிடர் கலகத்தினரின் மனதில் எப்போதும் சாதி குறித்த எண்ணம் மட்டும் தான் ஓடுகிறதா எனும் ஐயம் எழுகிறது.

முன்னதாக, சின்னக் கலைவாணர் என அன்போடு போற்றப்படும் நடிகர் விவேக், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

விவேக்கின் மரணத்திற்கு பிரதமர்  மோடி,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட  தலைவர்கள், திரைபிரபலங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று மாலை, அவரது உடல், காவல்துறை மரியாதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க சென்னை மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் தன் பங்கிற்கு, தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கி.வீரமணி கூறியிருப்பதாவது :- சிறந்த நகைச்சுவை நடிகரும், சீரிய சமூகப் பற்றாளருமான நண்பர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17.4.2021) அதிகாலை உயிரிழந்தார் என்று பேரதிர்ச்சியான செய்தி நம்மை பெரும் வருத்தத்துக்கு ஆளாக்குகிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அரசுப் பணியில் இருந்தபடி கலைத் துறையில் நுழைந்து, பின்னர் திரைத் துறையில் பெரு வெற்றி பெற்ற நடிகர் விவேக் அவர்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளைத் தன் படங்களில் வெளிப்படுத்தி, அதையே தன் அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும், அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு கலைஞரின் மரணத்திற்கு கண்ணீர் சிந்தி இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இரங்கல் செய்தியில் கூட சாதிய இணைப்பை குறிப்பிடும் நபர்களை என்னவென்று சொல்வது. 

ஒருவர் சமூக ரீதியாக பாதிக்கப்படும்போது, அந்த இடத்தில் சாதி குறித்து பேசினால் அதில் ஒரு நியாயம் உண்டு. அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இறந்த பிறகும் ஒருவரின் சாதியை குறிப்பிடும் திராவிடம் கழகத்தின் தலைவர், எங்கு சென்றாலும் சாதியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு செல்வது வேதனையாக உள்ளது.

ஒரு பக்கம் இது வேதனையை ஏற்படுத்தினாலும்,  விஷயமானாலும் அதில் சமபந்தப்பட்டவர்கள் "இன்ன சாதியினர்" என்பதைத் தேடும் இவர்களா சாதி ஒழிப்பாளர்கள் எனும் கோவமும் எழுகிறது.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். கி.வீரமணி சாதியைக் குறிப்பிட்டது சரியா? தவறா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!