அம்மா உணவகத்தை தாக்கியது மர்ம நபர்களா... செய்தி ஊடகங்கள் ஜால்றா ஊடகங்கள் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் முதல்வராக பதவி கூட ஏற்காத நிலையில், திமுகவினர் அம்மா உணவகத்தை அடித்து உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், புதிய தலைமுறை மற்றும் ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம், "திமுகவிடம் சரணாகதி அடைந்து விட்டனவா தமிழக ஊடகங்கள்" என கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் தமிழக முதல்வராகக் கூட பொறுப்பேற்காத நிலையில், சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்துள்ளனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கி, பெயர் பலகையை கிழித்த இருவர் மீதும் தகுந்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும், இதில் ஈடுபட்ட இருவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக, திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் ட்வீட் செய்துள்ளார். மேலும் கிழிக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும், அதே இடத்தில் நிறுவப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, திமுகவிற்கு ஜால்றா போடும் வேலையைத்தான், நடுநிலை என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள பல ஊடகங்கள் செய்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதத்தில் அத்தகைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசியல் தொடர்புடையவர்கள் ஏதேனும் குற்றச் செயல்கள் மேற்கொண்டால் கூட, பாஜக மற்றும் அதிமுகவே செய்தது போல் பரப்புரை நிகழ்த்தும் ஊடகங்கள், குறிப்பாக புதியதலைமுறை மற்றும் ஒன் இந்தியா தமிழ், அம்மா உணவகம் தாக்கப்பட்டது திமுகவினரால் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், மர்ம நபர்கள் தாக்கினார்கள் என செய்தி வெளியிட்டு, தான் ஒரு ஜால்றா ஊடகம் என்பதை வெளிப்படையாகவே நிரூபித்துள்ளது மக்களால் அருவருக்கத்தக்க வகையில் பார்க்கப்படுகிறது.




இந்த ஊடகங்கள் இத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால் தாக்கியது திமுகவினர் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டபடியால், திமுக தலைமை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த நிலையில், மர்ம நபர்கள் தாக்கியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பல்டியடித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி என செய்தி வெளியிட்டு, மகா மட்டமாக நடந்து கொண்டுள்ளனர்.





இது சமூக ஊடங்களில் கடும் கொத்தளிப்பை எதிர்கொண்டு வருகிறது. தமிழக செய்தி ஊடகங்களில் சில செய்தி ஊடகங்களாக செயல்படாமல், திமுகவின் எலும்புத் துண்டுகளை வாலாட்டும் ஜால்றா ஊடகங்களாக செயல்படுவதாக கூறி மீம்ஸ் போட்டு கண்டித்து வருகின்றனர்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு இங்கே :




இந்த ஜால்றா ஊடகங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!