63 வயதில் பதவி விலகிய காமராசர் எங்கே? 69 வயசுல கட்சி ஆரம்பிக்கப் போறேனு சொல்ற ரஜினி எங்கே? : நாம் தமிழர் கலகலப்பு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை என்றுமே கடுமையாக எதிர்ப்பவர் தான் நம்ம சிவகங்கை அண்ணாச்சியும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் பல வருடங்களாக அரசியலுக்கு இதோ வருவார், அதோ வருவார் என எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு வழியாக, "கிளம்பிட்டேன், இதோ வந்துக்கிட்டே இருக்கேன். அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் வந்து விடுவேன்" எனக் கூறி இருக்கிறார்.
ஆக அவர் அரசியலுக்கு வருவது உறுதியாயிற்று. இதையடுத்து அவரை வந்தேறி என்றும் பாஜக சதியென்றும் முகநூலில் கலகலப்பூட்டிக் கொண்டிருந்த நம் தம்பிமார்கள் தற்போது புதியதாக ரஜினியைப் பற்றிய மீம் ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர்.
அந்த மீம் இது தான்.

இந்த மீம்'ல் "63 வயதில் பதவி விலகிய காமராசர் எங்கே? 69 வயதில் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற ரஜினி எங்கே?" எனக் கேட்டு கலாய்த்துள்ளனர்.

கட்சி ஆரம்பிக்க வயசு முக்கியமா?
அவர் கட்சி ஆரம்பித்து அவருடைய கொள்கைகளை பேசுவார். மக்கள் அவருக்கு ஆதரவளித்தால் அவர் ஆட்சியில் கூட அமரலாம். அவர் அரசியல் ரீதியாக பேசும் விசயங்களை, செயல்களை நீங்கள் மீம் போட்டு கலாய்த்துத் தள்ளுங்கள். விமர்சனம் செய்யுங்கள்.

ஆனால் அவர் அரசியலுக்கு வருவதையே எள்ளி நகையாடுவது சரியான செயல் அல்ல. சீமானின் வரலாற்றைப் பார்த்தால் அவர் ஆதரவளிக்காத , இணைந்து செயல்படாத கட்சிகளே இங்கு இல்லை எனுமளவிற்கு உள்ளது. இதையெல்லாம் எள்ளி நகையாடி மீம் போட்டீர்களா?

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். இதில் ஏன் தம்பிகளா காமராசரை இழுக்கிறீர்கள்?

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்த வரை தலைமை முதல் தொண்டன் வரை ஒரு விசயம் நிதர்சனம். அது இவர்கள் தரவுகளை முன் வைத்து சொன்னால் நிச்சயம் அந்தத தரவு பொய்யானதாகத் தான் இருக்கும்.

அதற்கு இந்த மீம் கூட உதாரணம்.

காமராசர் 63 வயதில் பதவி விலகினார் என சொல்கிறீர்கள். காமராசர் பிறந்தது 15 ஜீலை 1903 அன்று. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது 1963'ம் ஆண்டு. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் 1903'லிருந்து 1963 வரை மொத்தம் எத்தனை ஆண்டுகள்?

60 ஆண்டுகளா? 63 ஆண்டுகளா?

வரவர கூட்டல் கணக்கில் இரண்டாம் கலைஞர் தளபதி ஸ்டாலினைப் போல் பேச ஆரம்பித்து விட்டனர்.

"ஆக" காமராசர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது தன்னுடைய 60'வது வயதில்.

"ஆக" நாம் தமிழர் அரசியலில் பால பாடம் என்பது, நாம் தமிழர்கள் தரவுகளோடு சொன்னால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும்.

சரி காமராசர் எதற்காக பதவி விலகினார்?
1962'ம் ஆண்டு இந்திய சீனப் போரில் இந்தியா தோல்வியை தழுவியதை அடுத்து, இந்திய மக்களிடையே காங்கிரசின் செல்வாக்கு வீழ்ச்சியுற தொடங்கியது. இதனால் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பதவி விலகி கட்சியை பலப்படுத்த வேண்டும். ஆட்சியை இளையவர்கள் சிறப்பாக வழி நடத்துவார்கள் என காமராசரால் முன்மொழியப்பட்ட "K Plan" என அழைக்கப்படும் இந்தத திட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதை அடுத்து காமராசர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தங்களுடைய அரச பதவியை இராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் நேரு மாமாவும் "K Plan" திட்டத்தின் படி பதவி விலக விரும்பியதாகவும் அதை காமராசர் தடுத்து நேரு மாமா தான் நாட்டை ஆள வேண்டும் என சம்மதிக்க வைத்ததாகவும் அதனால் தான் நேரு மாமா மட்டும் பதவி விலகவில்லை எனவும் ஒரு செய்தி நம்மூரில் உண்டு.

இந்த "K Plan" திட்டப்படி காமராசர் பதவி விலகிய ஆண்டு 1963.

அதாவது 1963'ம் ஆண்டு பதவி விலகியதை 63 வயதில் பதவி விலகினார் என நாம் தமிழர் தம்பிகள் தவறான புரிதலுடன் மீம் பகிர்ந்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!