திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் ஆயத்தப் பணிகள் : எங்கே செல்கிறது தமிழகம்? பரபரப்புத் தகவல்கள்

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணமாக பல விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாம் அந்த காரணங்களை பிறகு அலசலாம்.
தற்போது முகநூலில் குறிப்பாக சீமானுடைய நாம் தமிழர் கட்சி தம்பிகள் "திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். இனியாவது விழிக்கத் துவங்குமா?" என தொடர்ந்து நேற்று முதல் பல்வேறு விதமாக இரண்டு புகைப்படங்களை காட்டி பகிர்ந்து வருகின்றனர்.
படம் 1 :
படம் 2 :


மேலே காட்டப்பட்டுள்ள இந்த இரு புகைப்படங்கள் தான் அனைத்து பதிவுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு ஆயத்தப் பணிகள் இனிதே தொடங்கியது என பல்வேறு நபர்களால் பதியப்பட்டுள்ளது.
நீங்களும் முகநூலில் சென்று, "திருவாரூர் புலிவலம்" என தேடுபொறியில் தேடிப் பாருங்கள். பல்வேறு பதிவுகள் நேற்று முதல் பதிவிடப்பட்டிருப்பதும் அதில் பெரும்பாலானவை நாம் தமிழர் தம்பிகளாலேயே பதிவிடப்பட்டிருப்பதும்  தெரியவரும்.
உதாரணத்திற்கு சில இங்கே.


குறிப்பு : இதைப் பகிர்ந்த தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் முதலிரண்டு புகைப்படங்களில் மறைக்கப்பட்டும் இதைப் பகிர்ந்த பக்கங்களையும் குழுக்களையும் அனைவரும் அறியும்படி காட்டப்பட்டுள்ளது. இன்னும் யாரெல்லாம் எங்கெல்லாம்  இதைப் பகிர்ந்தார்கள் என்பதை அறிய முகநூலில் மேலே சொன்ன முறையில் தேடுங்கள்.

சரி, நாம் விசயத்திற்கு வருவோம். நாம் தமிழர் முகநூல் தம்பிகளால் பகிரப்படும் இந்த இரண்டு புகைப்படங்களும் சொல்வது என்ன?
இந்த இரண்டு புகைப்படங்களையுப் கண்டால் உங்களுக்கு ஆயத்தப் பணிகள் போன்று தோன்றுகிறதா?

நாம் இந்த இரு படங்களையும் "Google Reverse Image" தேடுதலின் மூலம் ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த தகவல்களைப் பார்ப்போம்.

படம் 1 சொல்வது என்ன?
படம் 1'ஐ Reverse Image Search மூலம் தேடியதில் இது கென்யாவின் துர்கானா பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெளிவாக தெரிகிறது. அங்கு பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான டல்லோவ் ஆயில் நிறுவனம் கென்யாவுடன் இணைந்து அந்நாட்டில் எண்ணை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த செய்தியை முழுமையாக அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
ஆக முதல் படம் திருவாரூர் புலிவலத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை நாம் உறுதி செய்து விட்டோம்.

படம் 2 சொல்வது என்ன?
படம் 2'ஐ Reverse Image Search மூலம் தேடியதில், 2 வருடங்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் பகுதியில் பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட செய்தியை விகடன் பத்திரிக்கை வெளியிட்டதுடன் இந்த புகைப்படத்தையும் அதனுடன் இணைந்திருந்தது. அந்த செய்தியை முழுமையாக தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
ஆக 2'வது படத்திற்கும் நாம் தமிழர் பரப்புவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திருவாரூர் புலிவலத்தில் உண்மையாகவே ஹைட்ரோகார்பன் எடுக்கும் ஆயத்தப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தால் அந்த புகைப்படங்களைக் காட்டி பேசலாம். ஆனால் அவ்வாறு அங்கு எந்த பணிகளும் புதிதாக நடைபெறவில்லை என்பதும் பொய்ச் செய்தியை பரப்பி மக்களை எந்நேரமும் அரசிற்கு எதிராக தூண்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவது நாம் தமிழர் கட்சியினருக்கு அழகல்ல.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை தலைவர் சீமான் முதல் தம்பிகள் வரை அனைவரும் போலியான தரவுகளை முன்வைத்து அரசியல் செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதும், படித்த இளைஞர்கள் நிறைய பேர் இதற்கு அடிமையாகிப் போவதும் நிச்சயம் வருங்காலத் தமிழகத்திற்கு நல்லதல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!