திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் ஆயத்தப் பணிகள் : எங்கே செல்கிறது தமிழகம்? பரபரப்புத் தகவல்கள்
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணமாக பல விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் நாம் அந்த காரணங்களை பிறகு அலசலாம். தற்போது முகநூலில் குறிப்பாக சீமானுடைய நாம் தமிழர் கட்சி தம்பிகள் "திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். இனியாவது விழிக்கத் துவங்குமா?" என தொடர்ந்து நேற்று முதல் பல்வேறு விதமாக இரண்டு புகைப்படங்களை காட்டி பகிர்ந்து வருகின்றனர். படம் 1 : படம் 2 : மேலே காட்டப்பட்டுள்ள இந்த இரு புகைப்படங்கள் தான் அனைத்து பதிவுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு ஆயத்தப் பணிகள் இனிதே தொடங்கியது என பல்வேறு நபர்களால் பதியப்பட்டுள்ளது. நீங்களும் முகநூலில் சென்று, "திருவாரூர் புலிவலம்" என தேடுபொறியில் தேடிப் பாருங்கள். பல்வேறு பதிவுகள் நேற்று முதல் பதிவிடப்பட்டிருப்பதும் அதில் பெரும்பாலானவை நாம் தமிழர் தம்பிகளாலேயே பதிவிடப்பட்டிருப்பதும் தெரியவரும். உதாரணத்திற்கு சில இங்கே. குறிப்பு : இதைப் பகிர்ந்த தனிப்ப...