தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறதா கூகுள் நிறுவனம்? - அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்
உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் 2016ல் வெளியிட்ட ஆண்ட்ராய்டு செயலியான கூகுள் டுயோ மூலம் தனது தமிழின விரோதப் போக்கை வெளிப்படுத்தியிள்ளதா?
அப்படி என்ன செய்தது.......
சரி விசயத்துக்கு வருவோம்!
கூகுள் டுயோ என்பது HD Video Calls'களை மேற்கொள்ள உதவும் ஒரு செயலி. இது Android மற்றும் iOS'களில் கிடைக்கிறது. இது கடந்த 2016 மே 18ம் தேதி கூகுள் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டு 16, 2016'ல் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கூகுள் டுயோ தனது பிலிப்பைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு Data Rewards சலுகையை அறிவித்தது. இதற்கடுத்ததாக நவம்பரில் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக Cash Rewards சலுகையை வழங்க ஆரம்பித்துள்ளது.
Cash Rewards Program'ல் இணைய இங்கே சொடுக்கவும்
இந்த Cash Rewards எப்படி செயல்படுகிறது?
கூகுள் டுயோ செயலியில் தனது முதல் Video Call'ஐ மேற்கொள்ளும் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த Cash Rewards கிடைக்கும்.
இந்த Cash Rewards எப்படி கிடைக்கும்?
இந்த Cash Rewards'ஐ பெற நீங்கள் Google Pay(Formerly Tez)'யில் கணக்கு வைத்திருக்க வேண்டும். கூகுள் டுயோவில் நீங்கள் முதல் Video Call செய்த 2-4 மணி நேரத்தில் உங்களுடைய கூகுள் பே கணக்கில் ஒரு Scratch Card வந்துவிடும். அதை நீங்கள் Scratch செய்வதன் மூலம் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை பெறலாம்.
Cash Rewards Program'ல் இணைய இங்கே சொடுக்கவும்
கூகுள் டுயோவில் வேறெந்த வகையிலாவது பணம் பெற முடியுமா?
முடியும். கூகுள் டுயோவில் கணக்கு வைத்திராத நபர்களை உங்கள் Referral Link மூலம் இணைத்து, அவர்கள் முதல் Video Call மேற்கொள்ளும் போது உங்களுக்கும், உங்களால் இணைக்கப்பட்ட நபருக்கும் கூகுள் பே'வில் Scratch Card வரும். அந்த Card'ஐ Scratch செய்வதன் மூலம் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை பெற முடியும்.
மேலும் இந்த Scratch Card'களின் மூலம் அதிகபட்சம் ஒரு நிதியாண்டில் 9000 ரூபாய் வரை ஈட்டலாம்.
Cash Rewards Program'ல் இணைய இங்கே சொடுக்கவும்
என்ன, முயற்சி செய்து பார்க்க தோன்றுகிறதா?
Wait..... Wait...... அவசரப்பட வேண்டாம். இங்கு தான் விசயமே உள்ளது. இந்த Cash Rewards Program'ஐ இந்தியாவின் அனைத்து மக்களும் பயன்படுத்திக் .கொள்ளலாம், அவர்களிடம் கூகுள் பே கணக்கு இருக்கும்பட்சத்தில். ஆனால் இதில் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் பயன்பெற முடியாது.
ஏன் இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு திட்டம் தமழர்களுக்கு மட்டும் கொடுக்கமாட்டார்களாம். தமிழர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று உணர்ச்சி மேலோங்குகிறதா?
அப்படி உணர்ச்சி மேலோங்கினால் நாம் எல்லாம் போராளிகள்.
இதில் இன்னும் கொஞ்சம் essence, அதாங்க "இதெல்லாம் பாஜக, RSS பார்ப்பனிய மோடி ஆட்சியின் மேற்பார்வையில் தான் நடக்கிறது" என்று சேர்த்தோமானால் நாமதாங்க வீரத் தமிழர்கள்.
சரி இந்த உணர்ச்சிய கழட்டி ஓரமா வச்சிட்டு ஏன் கூகுள் டுயோவின் இந்த Cash Rewards Program தமிழகத்திற்கு Applicable ஆகாது என்று பார்ப்போம்.
Tamil Nadu Prize Scheme (Prohibition) Act 1979 என்ற ஒரு சட்டம் உள்ளது நம்மில் சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் பலருக்கு தெரிந்திருக்காது. இந்த சட்டம் சொல்வது, எந்தவிதமான பரிசுத் திட்டங்களுக்கும் தமிழ்நாட்டில் அனுமதியில்லை என்பதே. ஆக, இது கூகுள் டுயோவின் சதியல்ல, தமிழக அரசின் சட்டமே இதை தடை செய்கிறது.
கடந்த 2015ல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கும் அமேசான் ஆன்லைன் விற்பனை நிறுவனத்திற்கும் நடந்த பஞ்சாயத்தும் இந்த சட்டத்தின் அடிப்படையிலானது தான்.
அந்த பஞ்சாயத்தைப் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.
இந்த கூகுள் டுயோவில் இணைய
இங்கே சொடுக்கவும்

கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment