நரேந்திர மோடியால் இந்தியப் பொருளாதாரம் 1970களுக்கு பின்னோக்கி சென்று விட்டதா?


ஜானி ஜானி எஸ் பாப்பா
முகநூலில் வருவதை அப்படியே நம்பக் கூடாது பாப்பா....

விசயம் என்னன்னா நம்ம அமெரிக்க வாஷிங்டன் போஸ்ட் ஒரு போஸ்ட் போட்டிருக்கு - அதில் இந்திய பிரதமரின் நடவடிக்கைகளால் பொருளாதார ரீதியாக இந்தியா பின்னோக்கி 1970'களுக்கு சென்று விட்டதாக எழுதியிருக்காம்.

இத வச்சு நம்மாளுங்க நம்ம இந்திய பிரதமர விமர்சிக்கிறார்களாம்.... விமர்சனம் பண்ணுங்க தப்பில்ல, ஆனால் பாதிய மென்னு முழுங்கி சொல்லாதீங்க.... முழுசா சொல்லுங்க....

இந்த கட்டுரை தற்போது வந்தத போல வெளியிட்டுருக்காங்க நம்ம ஆளுங்க... ஆனா உண்மை என்னன்னா இந்த கட்டுரை ஜனவரி 23, 2017ல் வெளிவந்திருக்கு, கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகப் போகிறது. இப்ப பரப்புவதன் நோக்கம் என்னனு பதிவ போட்டவருக்கே வெளிச்சம்.

அடுத்து இந்த கட்டுரை வந்திருப்பது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் குளோபல் ஒப்பீனியன் பகுதியில் வெளிவந்துள்ளது. குளோபல் ஒப்பீனியன் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பரிச்சயமான பத்திரிகையாளர்கள் தங்களது கட்டுரையை வெளியிடுவார்கள். முன்பொருமுறை நமது இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து போனபோது அங்குள்ள பத்திரிகையில் இந்திய-இங்கிலாந்து உறவைப் பற்றி எழுதினாரே அந்த ரகம்.... இன்னும் புரியலன்னா, The Hindu போன்ற பத்திரிகைகளில் சில சமயம் வெளிவரும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் கட்டுரையை பாருங்கள், அதுவும் இந்த ரகம் தான்...

அடுத்து இந்த கட்டுரையை எழுதியது யாரென்று பார்த்தால் நம்ம பர்கா தத் அக்கா.... இந்த அக்காவ பத்தி சொல்லணும்னா நீரா ராடியா டேப்'ல (அதென்ன நீரா ராடியா டேப்'ங்கறீங்களா, நம்ம 2ஜி விவகாரம் தான்) ஆரம்பிச்சு, கார்கில் போய் பல விசயங்கள பேசலாம், ஆனா அதெல்லாம் இப்ப வேணாம்..

கால் மேல் கால் போட்டு உட்காருவதை வைத்தும் மோடியை விமர்சனம் பண்ணும் நாம், இந்த பர்கா தத் அக்கா, ஐயா அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது நடந்த ஒரு கூட்டத்தில் அப்துல்கலாம் ஐயா உட்கார்ந்து பேசும் விதத்தையும், பர்கா தத் அக்கா உட்கார்ந்து பேசும் விதத்தையும் பார்த்தே முடிவு செய்து கொள்ளுங்கள் அக்கா குடியரசுத் தலைவருக்கு கொடுக்கும் மரியாதையை.


அடுத்து அக்கா எழுதிய கட்டுரையின் சாராம்சம் ஒன்றும் இந்தியா பொருளாதாரத்தில் 1970 நிலையை நோக்கி சென்றதாக குறிப்பிடவில்லை. மாறாக பணமதிப்பிழப்பிற்கு பிறகு இந்தியாவில் நிலவிய சூழலையும், மோடியை இந்திரா காந்தி 1970களில் நடந்து கொண்ட விதத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

சரி, கட்டுரையின் இணைப்பை இங்கு தருகிறேன். படித்து உங்கள் விமர்சனங்களை தெளிவாக வையுங்கள்.
https://www.washingtonpost.com/news/global-opinions/wp/2017/01/23/narendra-modi-is-pulling-india-back-to-the-1970s/?utm_term=.014e9fe85351

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!