சிபிஎஸ்இ கல்வி வாரியத்தைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த ஐசிஎஸ்இ கல்வி வாரியம்..!

நாட்டின் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் எனும் ஐசிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது என்று வாரிய செயலாளர் ஜெர்ரி அராத்தூன் இன்று தெரிவித்தார். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்த முக்கியமான முடிவு வந்துள்ளது.


"தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்று மதிப்பீட்டு அளவுகோல்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று அராத்தூன் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் இன்று ஒரு உயர்மட்டக் கூட்டத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களின்படி சரியான நேரத்தில் தொகுக்க நடவடிக்கை எடுக்கும் என்று முடிவு செய்தது. மாணவர்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உள்ள கவலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

12 ஆம் வகுப்பு மாணவர்கள் கடந்த வருடம் 11 ஆம் வகுப்பில் மற்றும் தற்போது 12 ஆம் வகுப்பில் பள்ளி அளவில் நடந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் தரவைச் சமர்ப்பிக்குமாறு ஐசிஎஸ்இ கல்வி வாரியம் கடந்த வாரம் அதன் கீழ் இயங்கும் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுநோயின் பேரழிவு தரும் இரண்டாவது அலையின் காரணமாக மே 4 முதல் திட்டமிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வுகளை வாரியம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசின் சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளுக்கான முடிவை பின்பற்றி தானும் தேர்வை ரத்தம் செய்துள்ளது. இதையடுத்து மாநில அரசின் கீழ் இயங்கும் கல்வி வாரியங்களும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!