சட்டத்தை தகர்த்தெறிய முற்பட்டால் மம்தா பானர்ஜி மீதும் சிபிஐ நடவடிக்கை எடுக்க முடியும்... உச்சநீதிமன்றம் பொளேர்!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ, அவரது சட்ட அமைச்சர் அல்லது சட்டத்தின் ஆட்சியைத் தகர்த்தெறிய முயற்சிக்கும் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு சுதந்திரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தால் நாரதா வழக்கில் நான்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சிபிஐ செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
சிபிஐ தனது மனுவில், மேற்கு வங்க முதல்வர் மே 17 அன்று தனது அலுவலகத்திற்கு விரைந்து சென்று சிபிஐ குறித்து பல கேவலமான மற்றும் அவதூறான கருத்துக்களை கூறியிருந்தார் எனத் தெரிவித்துள்ளது.
மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தில் ஆறு மணி நேரம் தர்ணாவில் அமர்ந்தார். அதே நேரத்தில் ஒரு கட்டுக்கடங்காத கும்பல் ஒன்று திட்டமிடப்பட்ட முறையில் சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே பெருகிக் கொண்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரணை அதிகாரி கைது செய்ததன் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இதனால் இடையூறு ஏற்பட்டது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் திங்கட்கிழமை கொல்கத்தாவில் உள்ள நிஜாம் அரண்மனையில் சிபிஐ கட்டிடம் மீது திரிணாமுல் காங்கிரஸின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் மீது கல் வீசி சட்டத்தின் செயல்பாட்டை சீர்குலைக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பி.ஆர்.கவாயிடம், சிபிஐயை பிரதிநிதித்துவப்படுத்தும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிடுவதில் முதலமைச்சர் மற்றும் சட்ட அமைச்சரின் நடத்தைக்கு ஏற்ப அவர்கள் செயல்படவில்லை என வாதிட்டார்.
இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு தீர்வு காண அரசியலமைப்பில் போதுமான தீர்வு இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டதுடன், "நாங்கள் இங்கு அரசாங்கத்துக்கோ அல்லது சிபிஐக்கோ ஆலோசனை வழங்க தேவையில்லை." என்று குறிப்பிட்டார்.
நீதிபதிகள் மேத்தாவிடம் மேலும் "முதலமைச்சரும் சட்ட அமைச்சரும் தர்ணா செய்ததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும்? நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராக தொடரவும்." எனக் கூறியுள்ளது.
சிபிஐக்கு அழுத்தம் கொடுப்பதற்காக முதலமைச்சரின் இத்தகைய தர்ணாக்களைப் பாராட்டவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஏற்கனவே இந்த விஷயத்தை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும் சிபிஐ தனது மேல்முறையீட்டை வாபஸ் பெற விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, சிபிஐ தனது மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment