அம்மா உணவகம் அடித்து நொறுக்கல்! இது தான் ஸ்டாலின் தரும் விடியலா? ஆட்சிக்கு வந்த உடனே அராஜகத்தில் இறங்கிய திமுகவினர்!
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் முதல்வராக பதவி கூட ஏற்காத நிலையில், திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 11.05 மணி வேலையை திமுகவினர் தொடங்கி விட்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களிடையே பேச்சாக உள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. 1996'க்குப் பிறகு தற்போது தான் தனிப்பெரும்பான்மையுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று திமுக ஆட்சியமைக்கும் இந்த சூழலில், தாங்கள் 2006-11 காலத்தைப் போன்ற ஆட்சி நிர்வாகத்தைத் தான் வழங்குவோம் என்பது போல் திமுகவினர் நடந்து கொள்வதாக பேசப்படுகிறது.
முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின் போதே, திமுகவின் கொ.ப.செ ஆ.ராசா மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போன்றோர், போலீசார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக நேரடியாகவே மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி வந்தனர்.
இதானால், திமுக ஆட்சிக்கு வந்தால் 2006-11 கால ஆட்சியைப் போல், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் மீண்டும் அராஜகம் தழைத்தோங்கும் என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் தமிழக முதல்வராகக் கூட பொறுப்பேற்காத நிலையில், சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்துள்ளனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை, தொடர்ந்து நிறைவேற்றுவது புதிய அரசின் நடவடிக்கையாக இருக்கும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு விநியோகிக்கப்பட்டு வந்தது பெரும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், திமுகவினரின் இந்த அடாவடி பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திமுகவினர் ஆட்டம் ஆரம்பாகிவிட்டதாகவும், ஆட்சிக்கு வந்த ஆணவத்தில் இதுபோன்று செய்து வருவதாகவும், மக்களுக்கான விடியல் தொடங்கி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும், திமுகவினர் ஆட்டம் ஆரம்பாகிவிட்டதாகவும், ஆட்சிக்கு வந்த ஆணவத்தில் இதுபோன்று செய்து வருவதாகவும், மக்களுக்கான விடியல் தொடங்கி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
பொதுவாக புதிய கட்சி ஆட்சிக்கு வந்தால், முதல் மூன்று மாதங்கள் அவர்களை விமர்சனம் செய்யாமல், அவர்களுக்கான நேரத்தை வழங்க வேண்டும் என்பது அரசியல் வழக்கம்.
ஆனால் ஸ்டாலின் முதல்வர் பதவியே இன்னும் ஏற்காத நிலையில், திமுகவினர் அராஜகத்தை தொடங்கியுள்ளதைக் கண்டு, இது தான் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா என ஆட்சி மாற்றத்திற்கு விரும்பி வாக்களித்த மக்கள் திமுக மீது சலித்துக் கொள்கின்றனர்.
சமீபத்திய அப்டேட் :
அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கி, பெயர் பலகையை கிழித்த இருவர் மீதும் தகுந்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும், இதில் ஈடுபட்ட இருவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக, திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் ட்வீட் செய்துள்ளார். மேலும் கிழிக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும், அதே இடத்தில் நிறுவப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் திமுகவினர் அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட பிறகு கடைகளுக்கு சென்று மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை கைவிட்டு, ஸ்டாலின் கட்சியினர் மீது கடுமை காட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திமுகவினரின் இந்த அராஜகம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க என கீழே கமெண்ட்ல சொல்லுங்க..


இது போன்ற அராஜக செயல் நடை பெற தலைமை அனுமதிக்க கூடாது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பதிலளிநீக்கு