இனி வாரா வாரம் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம்... எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?


ஜனவரி 2021 முதல் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை எனும் நிலையிலிருந்து மாற்றப்பட்டு வாரம் ஒரு முறை திருத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் சமையல் எரியாவு சிலிண்டரின் விலை அடுத்த ஆண்டிலிருந்து வாரா வாரம் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த விலைகள் மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் இப்போது எண்ணெய் நிறுவனங்கள் வாராந்திர அடிப்படையில் விலைகளை மாற்ற திட்டமிட்டுள்ளன. பெட்ரோலிய பொருட்களின் விலையில் தினசரி ஏற்ற இறக்கங்களைக் கொண்டு, பெட்ரோலிய நிறுவனங்கள் இப்போது வாரத்திற்கு ஒரு முறை விலைகளை மாற்றுவதற்கான வழிகளை பரிசீலித்து வருகின்றன.

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் மாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றப்பட்டால், ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். 

புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன. கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிற பொருட்களைச் சேர்த்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

ஆனால், எல்பிஜி சிலிண்டரின் விலையை மாதாந்திர அடிப்படையில் நிர்ணயிப்பதன் மூலம், நிறுவனங்கள் முழு மாதத்திற்கும் இழப்பைச் சுமக்க வேண்டியிருக்கும். இந்த பின்னணியில், பெட்ரோலிய நிறுவனங்கள் விலைகளை மாற்றுவது குறித்து நீண்டகாலமாக ஆலோசனை செய்து வருக்கின்றனர். 

டிசம்பரில் மட்டும் இரண்டு முறை விலை உயர்வு:

நிபுணர்களின் கூற்றுப்படி, பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த வாராந்திர விலை உயர்த்தும் புதிய கொள்கையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன எனத் தெரிகிறது. ஆனால் இதுவரை எந்த விதமான அதிகாப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

எல்பிஜி சிலிண்டரின் விலை டிசம்பரில் இதுவரை இரண்டு முறை அதிகரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியும் இது தான் எனக் கூறப்படுகிறது. ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால், மக்கள் அதை அறிந்து கொள்ள முடியவில்லை.

எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் வீழ்ச்சி ஆகியவை சந்தையில் வணிக மற்றும் மானிய சிலிண்டர்களின் விலையை ஒரே நிலைக்கு கொண்டுவந்தால், இந்த ஆண்டு செப்டம்பரில் சமையல் எரிவாயு மானியங்களை அரசாங்கம் நீக்கியது. 

ஆனால் இப்போது சந்தை விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதால், அரசாங்கம் மானிய சலுகைகளையும் அதிகரிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!