இடுகைகள்

பசும்பொன் தேவர் அய்யாவைக் கொலை செய்ய முயர்ச்சித்தார்களா?

படம்
பசும்பொன் தேவரை கொலை செய்ய முயற்சித்த இஸ்லாமியர்கள்... பசும்பொன் கிராமத்துக்கு அருகே இருக்கும் ஊர் அபிராமம். அங்கே இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்குப் போய் தொழிலோ, வியாபாரமோ செய்து திரும்பி வந்தவர்கள் பெரும் பணக்காரர்களாக வாழ்பவர்கள். அந்த கிராமத்தில் ஒரு சந்தை இருந்தது. வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடும். அது முஸ்லீம்கள் அதிகம் வசிக்கிற பகுதி. சந்தைக்கு வியாபாரம் செய்ய வருகிற இளம் பெண்களை சில முஸ்லீம் இளைஞர்கள் கேலி செய்து வம்புக்கிழுப்பது நடந்து வந்தது. ஒரு நாள் மோர் விற்ற ஒரு பெண்ணிடமும், காய்கறி விற்கப் போன பெண்ணிடமும் அவர்கள் மோசமாக நடந்து கொண்டார்கள். அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு அங்கே யாருக்கும் தைரியமும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் பசும்பொன்னுக்கு வந்தார்கள். தேவரிடம் முறையிட்டார்கள். "நான் பார்த்துக்கொகிறேன். போய் வாருங்கள்" என்று அந்தப் பெண்களை அனுப்பி வைத்தார் தேவர். எம்மதத்தினராயினும் சரி தாய்க்குலமாகிய பெண் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியைத் தாங்கமுடியாத உள்ளம் கொண்ட தே...

சீமான் அண்ணாச்சியும் நாயக்கர்களும் - அண்ணனுக்கு என்ன தான் ஆச்சு!

படம்
சிவகங்கையிலிருந்து சினிமா ஆசையின் காரணமாக சென்னை வந்த சீமான் தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு பெரியாரியவாதியாக காட்டிக் கொண்டார். பின்னர் தமிழர் தேசியம் என்றார், வீரத் தமிழராக நாயக்கர்களைக் கை காட்டி நம்மை அவர்கள் அடிமைப் படுத்தி ஆண்டார்கள், அவர்கள் வந்தேரிகள் என்று நமது உணர்ச்சியை தூண்டினார். பிறகு சில காலம் கழித்து நாம் தமிழரான பிறகு நாயக்க வாரிசுகளை "என் அப்பத்தா, என் அப்பச்சி" என வீர வசனம் பேசி உணர்ச்சியை தூண்டுகிறார். உண்மையில் இவரின் கொள்கை தான் என்ன? யாருக்கு தெரியும், நேத்து நாயக்கர்களை திட்டி, இன்று ஆராதிப்பதைப் போல நாளைக்கு வந்தேரிகளையும் ஆராதிக்கலாம். ஒரு கட்சியென்றால் அதன் தலைமைக்கு ஒரு கொள்கை இருக்கும். அதன் வழி நடப்பவர்கள் அந்த கட்சியில் இணைந்து செயல்படுவர். கட்சியை தொடங்கியவருக்கே என்ன கொள்கை, கோட்பாடு என்பது தெரியாத போது இவரை நம்பி பின்செல்லுபவர்கள் "ஏன்னே இப்படி?" என்று கேட்கிறார்களா என்று பார்த்தால் அவர்கள் எளிய தமிழ்ப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த மாதிரியான எளிய தமிழ்ப் பிள்ளைகளை பார்க்கும் போது, இங்கு இணை...

நரகாசுரரும் தீபாவளியும் - என்ன தான் பிரச்சினை இந்த தமிழ் மண்ணில் (பாகம் 1)

படம்
Guwahati view from Narakasura Hill ஒவ்வொரு ஆண்டு தீபாவளி வரும் போதும் நரகாசுரரை முன் வைத்து தமிழ்நாட்டில் ஒரு இனப் பிரச்சினையே சில தமிழ் தேசிய இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது. உண்மையில் நரகாசுரர் ஒரு தமிழரா? தமிழ்ப் பிரதேசத்தை ஆண்ட மன்னரா? எதற்காக நரகாசுரரை முன் வைத்து தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இந்த இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது? இவற்றையெல்லாம் உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். இந்த பதிவில் நரகாசுரரை பற்றி புராணங்கள், நாட்டுப்புற கதைகள், வரலாற்று எச்சங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தகவல்களை பகிர்கிறேன். நரகாசுரரை பார்க்கும் முன் அவர் ஆட்சி செய்த பிரஜ்யோதிஸ்பூருக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோம்! பிரஜ்யோதிஸ்பூர் எங்க இருக்கு? இன்றைக்கு கவுகாத்தி என்றும், குவ்காத்தி என்றும் நம்மால் அறியப்படும் அசாமின் தலைநகரம் தான் பண்டைய பிரஜ்யோதீஸ்பூர். பிரஜ்யோதீஸ்பூரை யார் ஆண்டார்கள்? இலக்கியத் தகவல்களின் மூலம் பண்டைய அசாம் பகுதியை உள்ளடக்கிய பிரஜ்யோதீஸ்பூரை ஆண்ட முதல் வம்சம் தனவா வம்சம் என்பதும், முதல் அரசர் மகிரங்க தனவா என்பதும் அறியப்படுகிறது. இவர்கள் இமயமலையில் இன்ற...